ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், திமுக வடக்கு ஒன்றியம் மற்றும் கமுதி, அபிராமம் பேரூர் கழகம் சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று
பேருந்து நிலையம் எதிரே கேக் வெட்டி, பொது மக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி
கொண்டாடப்பட்டது.
மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் 300 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு சேலை, வேஷ்டி வழங்கப் பட்டது.திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் இவ்விழாவிற்கு தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கமுதி பேரூர் கழகச் செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
மேலும் அவைத்தலைவர்கள் ராஜேந்திரன், லெட்சுமணன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார்,
மாவட்ட பிரதிநிதிகள் பாரதிதாசன்,காசிலிங்கம்,சேசுராஜ், நந்தகோபால், மணிகண்டன்,வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிரஞ்சீவி,
ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமர், காவடி முருகன், கண்ணன், ராஜசேகர், பழனி, மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயராஜ்,பூங்கொடி, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் நேதாஜி சரவணன், நூர்தீன் மற்றும் மகளிரணியினர் உட்பட
500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போல் கமுதி அருகே மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கப்படை கிராமத்தில்,
நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை
முன்னிட்டு, திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ
அறிவுறுத்தலின் பேரில்,மாவட்ட பிரதிநிதியும்,கிளைச் செயலாளருமான மணிகண்டன் ஏற்பாட்டில்,அரசு ஆதி திராவிடர் நலதொடக்கப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.