பெருங்குளம் மற்றும் மங்கள்குறிச்சி கிராம விவசாயிகள் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் அவர்களை நேரில் சந்தித்து தங்களது விவசாய நிலங்களில் உள்ள வாழைகளை காப்பாற்ற மங்கலகுறிச்சி ஆழங்கால் வாய்க்காலை தூர்வாரி தருமாறு கேட்டுக் கொண்டனர்.
இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் அவர்கள் உடனடியாக காலை தனது சொந்த செலவில் ஹிட்டாச்சி எந்திரம் மூலம் வாய்க்காலை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், பெருங்குளம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் மாயன், அதிமுக 15 வது வார்டு செயலாளர் ஜெயமுருகன், அதிமுக மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சுந்தர்,மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் பழக்கடை திருப்பதி, முன்னாள் சாத்தான்குளம் ஒன்றிய துணை சேர்மன் அப்பாதுரை, திருச்செந்தூர் வீரராகவன் மற்றும் விவசாயிகள் பாலையா, பட்டு பாண்டி, இம்மானுவேல், ரவி,முத்துமாலை உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்