பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலக்களக்குடி கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் அஜித்குமார் வயது-29,இவர் ஆலங்குடி பிராத்தனை கிராமத்தில் வசித்து வந்த புண்ணியமூர்த்தி மகள் காவ்யா வயது -26,
இவர் எம்.ஏ.பி.எட். படித்து விட்டு ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
அஜித் குமாரும் காவியாவும் கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் .
இந்நிலையில் காவியாவின் பெற்றோர் அவருடைய அத்தை மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர்.
காவியா இவ்விபரத்தை அஜித்குமாருக்கு தெரிவிக்காமல் அவருடன் பேச்சுவார்த்தையில் இருந்து உள்ளார் .இந்நிலையில் காவியா அஜித்குமாரிடம் வீடியோ காலில் பேசும் போது நிச்சயதார்த்தம் செய்த விபரம் அப்போது எடுக்கப்பட்ட போட்டோ ஆகியவற்றை காண்பித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அஜித்குமார் காவியா பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் மாரியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் மண்டையில் பல இடங்களில் தாக்கி கொலைச்செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
சம்பவ இடத்திற்கு பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேல், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியவன் ஆகியோர் விரைந்து வந்த பிரேதத்தை கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த கொலையாளி அஜீத்குமார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த பெண்ணின் தந்தை தந்தை புண்ணியமூர்த்தி ஆலங்குடி திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது….
பாபநாசம் அருகே காதலன் காதலியை கத்தியால் கொட்டி கொலை செய்தோமோ பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..