நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சிவப்பு கை ரேகை மரம் உருவாக்கி விழிப்புணர்வு

நாட்டின் பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் ரீதியான அத்துமீறல்கள் தொடர்ந்து நடப்பதால், அத்துன்பத்தில் இருந்து, அவர்களை காப்பாற்றி, அரவணைத்து செல்லும் வகையில் நவம்பர் 25 ந்தேதி துவங்கி டிசம்பர் 10 தேதி வரை 16 நாட்களுக்கு,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

இதன் ஒரு பகுதியாக கோவையில், கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பரப்புரை விழிப்புணர்வு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது..

உக்கடம் தாஜ் டவர் அரங்கில் நடைபெற்ற இதில்,சமூக நீதி கூட்டமைப்பின் பொது செயலாளர் டாக்டர்.ஜி.முகம்மது ரபீக் தலைமை வகித்து பேசினார் அப்போது பேசிய அவர்,பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுப்பது நம் அனைவரின் கடமை என தெரிவித்த அவர்,தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திராவிட மாடல் ஆட்சியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருவதாக கூறினார்..

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக,திராவிட இயக்கம் தமிழர் பேரவை துணை பொது செயலாளர் க.சு.நாகராஜ்,குரு பவுண்டேஷன் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளில் சிவப்பு மைய கொண்டு கைரேகை மரம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..

தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்முறை பாதுகாப்பு குறித்த சட்ட வழிமுறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *