திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறப்பு இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர்/ நகை சரிபார்ப்பு அலுவலர் ப. இராணி முன்னிலையில் ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் திறந்து மஞ்சக்குடி சுவாமி தயானந்த கல்லூரி மாணவர்கள், தொழவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், வலங்கைமான் விடியல் பாராமெடிக்கல் பயிற்சி பள்ளி மாணவிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் எண்ணிக்கை பணியில் ஈடுபட்டனர். 6 நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூபாய் 21,75,245 ரொக்கமும், பொன் இனங்கள் 0.203 கிராமும், வெள்ளி இனங்கள் 0.244 கிராமும் பக்தர்களால் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.

உண்டியல் திறப்பு ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ஆய்வர் க.மும்மூர்த்தி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *