பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானம் & V.O.C.உள்விளையாட்டு அரங்கில் மாநில சீனியர் அட்யா பட்யா சேம்பியன்சிப் போட்டிகள் நடைப்பெற்றது.அப்போட்டிகளில் தமிழகம் முழுவதும் 36 அணிகள் கலந்து கொண்டது.வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வெற்றிக்கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது

பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு அட்யா பட்யா சங்க பொதுச்செயலாளர் சிவா தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நீச்சல் கழக தலைவர் முனைவர்.S.திருமாறன் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில பொதுச்செயலாளர் முனைவர்.வெ.பெரியதுரை திருநெல்வேலி மாவட்ட செஸ் முன்னேற்ற சங்க செயலாளர் பால்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பாராட்டினார்கள்.கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட அட்யா பட்யா சங்க செயலாளர் .இசக்கி வரவேற்று பேசினார்

அவ்விழாவில் சங்க நிர்வாகிகள் ஜெயராஜ் ,ஆதவன்,சுடலைமணி , ஆறுமுக நையினார்,காளி,நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அட்யா பட்யா சங்க தலைவர் கல்லூர் இ.வேலயுதம் செய்து இருந்தார். நிறைவாக மாவட்ட சங்க இணைச்செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *