பெரியபாளையம் அருகே அம்மணம் பாக்கம் கூட்டுச்சாலையில் புதிதாக அருள்மிகு ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்தஅம்மணம் பாக்கம் கூட்டுச்சாலையில் சுமார் 53 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த நவசக்தி விநாயகர் கோவில் இருந்து வந்தது.

இக்கோவிலில் சுற்று வட்டார பகுதி சார்ந்த மக்களும்,வியாபாரிகள் வழிபட்டு வந்தனர்.இந்நிலையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக இக்கோவில் அங்கிருந்து அகற்றப்பட்டு அருகே கிராமப் பொதுமக்கள், மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் கோவில் கடந்த ஆண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நடப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது.

இக்கோவிலில் புதிதாக தனிகை பாலமுருகன், ஸ்ரீ நாகாத்தம்மன், நவக்கிரஹ மூர்த்திகள், மற்றும் பரிவார மூர்த்திகளான மஹா விஷ்ணு, குருதட்சணாமூர்த்தி, துர்கா தேவி உள்ளிட்ட சாமிகளுக்கு நவசக்தி விநாயகர் கோவிலில் சன்னிதானத்தில் தனித்தனியாக கோவில்களும் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 24ஆம் தேதி பந்தக்கால் நடப்பட்டு
26.ஆம் தேதி கிராம தேவதையான ஸ்ரீ செல்லியம்மன் கோவிலுக்கு கிராம பொதுமக்கள் பொங்கல் வைத்து செய்தனர். தொடர்ந்து கணபதி ஹோமம், கோ பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது.நேற்று 28-ம் தேதியன்று சிலைகள் கரிவலம், நடைபெற்ற பின்னர் மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருஷ்ரூகிரஹனம் ரக்ஷாபந்தனன்ம் காலையாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து புதிய பிம்பங்கள் பிரதிஷ்டை, 29ஆம் தேதி இரண்டாம் காலையாக பூஜை, விசேஷ சாந்தி, தொடர்ந்து மூன்றாம் காலையாக பூஜை, நாடி சந்தானம், உள்ளிட்ட பூஜைகள் நடந்து முடிந்த பின்னர் நேற்று 30ஆம் தேதி நேற்று காலை நான்காம் காலையாக பூஜை மஹாபூர்ணாஹூதி, பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வந்து ஓம குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை பரணீதர சிவாச்சாரியார் தலைமையில் கொண்டு சிவாச்சாரர்கள் தலையில் சுமந்து கோவில் சுற்றி வளம் வந்து 7:30 மணி அளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர்த்தெளிக்கப்பட்டது.

அதன்பின்னர் மூலவர்களுக்கு பால், தயிர்,சந்தனம்,இளநீர், தேன்,சந்தனம்,பன்னீர், ஜவ்வாது,திருநீர்,மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடையில் வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து தீப, தூப,ஆராதனைகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

உற்சவர் விநாயகர் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம். கணேசன்,டி.கணேசன்
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜி.சரவணன், என்.ஞான மூர்த்தி, டி. ராஜா,ஜி.கோபி,ஜி பிரேம்குமார்,ஜெ.பழனி, கஜேந்திரன்,கே.டில்லி பாபு, ஸ்ரீராம், எம்.சுந்தர், ஆர்.நரேஷ் குமார் மற்றும் விழா குழுவினரும்,கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர் சீனிவாசன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *