தேனி மாவட்டம் கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கும்பாபிஷேகம் கோலாகலமாக வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றும் போது வானத்தில் கருடன் வட்டமிட்டதை பார்த்த ஆன்மீக பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்று கோஷமிட்டனர். கம்பம் நகரில் நகரின் இதய பகுதியில் 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது கம்பராய பெருமாள் காசி விஸ்வநாதர் கோயில் ஒரே வளாகத்தில் சிவனும் பெருமாளும் தனித்தனி சன்னதிகளில் இருப்பது இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும் வலது கை சின்முத்துரையுடனும் இடது கையில் கம்ண்டலத்துடன் தட்சிணாமூர்த்தியின் ஆறு முகங்கள் 12 கைகளுடன் முருகனும் தெற்கு நோக்கி பைரவரும் உள்ளனர்

கோவில்களில் மேற்கு தெற்கு திசை நோக்கி இருக்கும் பைரவர்கள் அதிக சக்தி கொண்டவர்கள் என புராணங்கள் கூறுகின்றன இங்குள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் 22 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது தற்பொழுது 22 ஆண்டுகளுக்கு பின் திருப்பணிகள் உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது

கும்பாபிஷேகத்திற்கான யாக கால பூஜைகள் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜை தன பூஜை மகா கணபதி ஹோமம் கோ பூஜை நவக்கிரக ஹோமங்கள் நடந்தன நேற்று நவம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாக பூஜையும் மாலை ஜந்தாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றது இன்று திங்கட்கிழமை அதிகாலை ஆறாம் கால யாக பூஜையும் 5 மணிக்கு பூர்ண ஹீதி தீபாராதனையும் நடைபெற்றது காலை 5.30 மணிக்கு கடம் புறப்பாடு ஆதி காசி விஸ்வநாதர் காசி விசாலாட்சி அம்மன் பரிவார விமானங்களுக்கு பல்வேறு புண்ணிய தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது

இதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு காசி விஸ்வநாதர் காசி விசாலாட்சி மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றும்போது வானத்தில் கருடன் வட்டமிட்டதை பார்த்த பக்தர்கள் நமச்சிவாயா நமச்சிவாயா என்று கோஷமிட்டது கம்பம் நகரையே குலுங்க வைத்தது.இந்த கும்பாபிஷேகத்திற்கேன கோவில் வளாகத்தில் மூலவர் சன்னதி தெற்கு வாசல் அருகில் காசி விஸ்வநாதருக்கு 9 குண்டங்கள் விசாலாட்சி அம்மனுக்கு 9 குண்டங்கள் விநாயகர் தட்சணாமூர்த்தி பைரவர் முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 8 குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது மேற்கு பக்கம் சுவாமி அம்பாளுக்கும் கிழக்கு பக்கம் பரிவார தெய்வங்களுக்கும் யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது

பக்தர்கள் அந்த இடைவெளியில் அமர்ந்து இரண்டு யாகசாலை பூஜைகளையும் பார்த்து இறையருள் பெறுவதற்கு சிறப்பான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கம்பம் நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்திருந்தது .

கும்பாபிஷேகம் காண ஆன்மீக பக்தர்கள் காலை 4 மணியிலிருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சிவன் அருள் பெற்றனர்.இந்த விழாவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் இராமகிருஷ்ணன் நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் மனிதநேயர் பண்பாளர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா ராமஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மேனஜீங் டைரக்டர் கே ஆர் சௌந்தரராஜன் தாளாளர் கவிதா சௌந்தர்ராஜன் நாகமணி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம் எஸ் எஸ் காந்தவாசன் எஸ்.பி.எம் ஜெய் டெக் மேல்நிலைப்பள்ளி சேர்மன் ஏ ஜெகதீஷ் சக்தி விநாயகர் பள்ளியின் தாளாளர் அச்சு நாகசுந்தர் நாலந்தா பள்ளி விஸ்வநாதன் ஆர் ஆர் பள்ளி சேர்மன் ஆர் ராஜாங்கம் பாத்திமா கிளினிக் டாக்டர் சையது சுல்தான் இப்ராகிம் கம்பம் ஆனந்தம் டெக்ஸ்டைல்ஸ் அதிபர் ராமர் தேவி ராஜா டிம்பர் பர்னிச்சர் அதிபர்கள் பி முருகன் பி. எம். ராஜாராம் ஏபி அகமது பம்ப்ஸ் அதிபர் அப்துல் சமது ஹோட்டல் ஸ்ரீகுமார் ஆர்த்தி பேக்கரி ஸ்வீட்ஸ் தொழில் அதிபர் ஸ்ரீகுமார் ராஜேந்திரன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிளைவுட்ஸ் அதிபர் எஸ் கே வி சொக்கராஜா ஆனந்த் எலும்பு முறிவு மூட்டு மாற்று முட நீக்கியல் மருத்துவமனை அதிபர் டாக்டர்கள் ஆர் ஆனந்தகுமார் பிரீத்தி ஆனந்தகுமார் ராதா கிளினிக் அதிபர் டாக்டர் எம் கோபாலகிருஷ்ணன் கம்பம் ஆர்யாஸ் ஹோட்டல் அதிபர் தொழிலதிபர் கே எஸ் பெருமாள் துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் எம். வேல் பாண்டியன் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள் ஆன்மீக பக்தர்கள் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *