கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கி கர்மவீரர் காமராஜரின் திரு உருவப்படத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வசந்தகுமார் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினர் இவ்விழாவில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப் போட்டி போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்ற நிலையில் சிறப்பு அழைப்பாளராக வால்பாறை வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து கூறினார் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் உதயகுமார், ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்த நிலையில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு சர்க்கரைப் பொங்கல், இனிப்புகள் மாணவர்களுக்கு வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது விழா முடிவில் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார் வெகுசிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு கொண்டு சிறப்பித்தனர்
