திண்டுக்கல் மாவட்டம் பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது. பழநி முருகன் கோயிலில் (நவ.,27) அன்று மாலை சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதல் உடன் கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது.

விநாயகர், மூலவர்,வள்ளி,தெய்வானை, சண்முகர், சின்னகுமாரசுவாமி, துவாரபாலகர், மயில், சன்னதி தெய்வங்களுக்கு காப்பிடப்பட்டது. ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் சண்முகர் அர்ச்சனை, சண்முகர் தீபாராதனை, சின்னகுமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை நடைபெற்றது.

இரவு 7:30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். டிச.,2 ல், மாலை 5:30 மணிக்கு பூஜை சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்றப்படும். டிச.,3., அன்று மஹா கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜைகளும் துவங்கும். மதியம் 2:00 மணிக்கு சண்முக அர்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடக்கும்.

மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை 4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். முருகன் கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் வைத்தல் நடைபெற்றது.அதன் பின் 6:00 மணிக்கு திரு கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதலுடன் தொடர்ந்து திரு ஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் மஹா கார்த்திகை தீபம் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *