குரும்பூரில் அரசு கட்டிட திறப்பு விழாவிற்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைமுற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2021-ல் நகைகடன் மோசடியில் நகைகளை மீட்டுத்தரக்கோரி 100-க்கும் மேற்பட்ட மக்கள் கண்ணீர் மல்க முற்றுகையிட்டு போராடத்தில் ஈடுபட்ட போது போராட்டக்காரர்களிடம் அமைச்சர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பாகியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் அங்கமங்கலம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. அங்கு அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், விவசாயிகள் நகைகளை வைத்து நகை கடன் வாங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.2 கோடி மதிப்பிலான தங்க நகைகடன் மற்றும் 50 கோடி வைப்பு நிதி ஆகியவற்றை வங்கி அதிகாரிகள் கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஆறு வருடங்களாக திமுக அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகளிடம் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அங்கமங்கலம் ஊராட்சியில் அரசு கட்டிட திறப்பு விழாவிற்கு வருகை தந்த திமுக அமைச்சர் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் நகைகளை பறி கொடுத்த பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட மக்கள் கண்ணீர் மல்க முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் திமுக அமைச்சர் மற்றும் திமுக கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆவேசமாக பேசினர். இதில் வாக்குவதாதம் முற்ற காவல்துறையினர் பாதிக்கபட்ட மக்களை கூட்டத்தில் இருந்து வெளியே இழுத்தனர். இதனால் காவல்துறையினருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் மக்களிடம் ஏதோ தப்பிக்க வேண்டும் என எண்ணி வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது என சமாளித்துவிட்டு விட்டால் போதும் என தலைதெறிக்க திமுக அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் அங்கிருந்து ஓடி விட்டனர். திமுக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பாகியது.