பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் பகுதியில் பலத்த புயல் சூறாவளி காற்றினால் ஆயிரக்கணக்கான வாழை கன்றுகள் அழிந்து சேதம் ……
உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பாபநாசம்,அரையபுரம்,கோபுராஜபுரம் , வங்காரம்பேட்டை,ராஜகிரி, பண்டாரவாடை,கோவில்தேவராயன்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டிட்வா புயல் காரணமாக வீசிய பலத்த காற்றில், ஆயிரக்கணக்கான வாழை கன்றுகள் பயிரிடப்பட்டு இருந்த ஒரு மாதமே ஆன வாழை கன்றுகள் கனமழையால் முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது .
லட்சக்கணக்கான ரூபாய்க்கு செலவு செய்து ஒரு மாதமே ஆன வாழை கன்று முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் தோட்டக்கலை அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் என வாழை விவசாயிகளான அரையபுரம் மதியழகன் ,பண்டாரவாடை சங்கர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.