மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த் திகை தீப திருநாளை யொட்டி லட்ச தீபம் ஏற்றப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் கார்த்திகை திருவிழா சிறப்பு வாய்ந்தது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக கார்த்திகை தீபதிருநாள் அன்று கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப் படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நடந்து
வருகிறது.
நேற்று கார்த்திகை தீப திருநாள் என்பதால் பொற்றாமரைக்குளம், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சன்னதிகள் என கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதை யொட்டி இரவு 7 மணிக்கு மீனாட்சி-சுந்தரேஸ்வரர், பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதிக்கு சென்றனர்.
அங்கு அம்மன் தேரடி அருகிலும், சுவாமி தேரடி அருகிலும் சொக்கப்பனை ஏற்றப்படும் இடத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்