துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் உள்ள ஜெய் கார்டனில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் தலைமையில் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தவெக ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் 04/12/2025 அன்று ஜெய் கார்டனில் நடைபெற்றது.
இதில் வரும் (2026) சட்டமன்ற தேர்தலில் பூத் ஏஜெண்டுகள் நியமிப்பது குறித்தும் சட்டமன்ற தேர்தல் பணியில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் எஸ்ஐஆர் திருத்தத்தை பற்றிய விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட தவெக இணை செயலாளர் மதன், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, தொகுதி பொறுப்பாளர்கள் கவியரசன், சதாசிவம், நாகராஜ்,மாவட்ட இளைஞரணி சுதாகர்,ராஜசேகர்,மாவட்ட மகளிர் அணி
இணை அமைப்பாளர்கள் கமலவல்லி, ஐஸ்வர்யா, காயத்ரி, துறையூர் வடக்கு நகர செயலாளர் சூர்யா, துறையூர் தெற்கு நகர செயலாளர் வினோத்,துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், துறையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மா,துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், துறையூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
ரவி, உப்பிலியபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜய் ஆனந்த்,
உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் குணா,உப்பிலியபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில் முக்கியமான வருங்கால நிகழ்வுகள் பற்றி ஆலோசனை செய்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்