தமிழக சட்டமன்றத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கு 2000 மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன்படி ஒரு மண்டலத்திற்கு 100 தம்பதிகள் வீதம் தமிழக முழுவதும் 20 மண்டலங்களில் 2000 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

அதன் ஒரு பகுதியாக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள காரமடை அரங்கநாதர் கோவிலில் 20மூத்த தம்பதிகளுக்கு கோவை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் முன்னிலையில் சிறப்பு செய்யப்பட்டது.
மேலும் அவர்களுக்கு வேட்டி,சேலை,சட்டை,இனிப்புகள் மற்றும் சில்வர் தட்டு உட்பட பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது


இந்நிகழ்ச்சியில் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி,அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி, காரமடை நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் டி ஆர் சண்முகசுந்தரம் காரமடை திமுக நகரப் பொறுப்பாளர் குரு பிரசாத், ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *