துறையூரில் திராவிட கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்பு தமிழக ஆளுநரை கண்டித்து திராவிட கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ் நாட்டையும், தமிழர்களையும் தொடர்ந்து இழிவு படுத்தி பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து துறையூரில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ச.மணிவண்ணன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.

இதில் மாநில ப.க. அமைப்பாளர் அ.சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட காப்பாளர் ப.ஆல்பர்ட், மாவட்ட துணைத் தலைவர் முசிறி மா. ரத்தினம், மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர். என்.ரவியை கண்டித்து கண்டன உரையாற்றி முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ. ஸ்டாலின் குமார்,முன்னாள் சேர்மன் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர், நகர்மன்ற துணைத் தலைவர் மெடிக்கல் முரளி,ஒன்றிய செயலாளர்கள் இள.அண்ணாதுரை, வீரபத்திரன்,முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன் தாஸ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், காங்கிரஸ் கமிட்டி ஆ.பாண்டியன், ந.ராமநாதன், கண்ணணூர் ராஜு, நடேசனார், இந்திய கம்யூனிஸ்ட் விஏஓ செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொன்னுசாமி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் கோர்ட் பாலகிருஷ்ணன், கோர்ட் நந்தகுமார்,ஹவுசிங் யூனிட் கோர்ட் சந்திரபோஸ், மிலிட்டரி மணி, சிங்களாந்தபுரம் கிளைத் தலைவர் ஞானசேகரன், மாணவரணி இனியன் சம்பத், உப்பிலியபுரம் ஒன்றிய தலைவர் மாராடி எம். ஏ. ரமேஷ்,மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் பாலச்சந்திரன்,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ரஞ்சித் குமார், ஒன்றிய தலைவர் வரதராஜன்,மாவட்ட இளைஞரணி சரண் ராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் தன்ராஜ், செயலாளர் விஷ்ணு வர்தன்,மாவட்ட ப.க.அமைப்பாளர் மு. தினேஷ், துறையூர் நகர இளைஞரணி தலைவர் இளையராஜா, நகர ப. க. அமைப்பாளர் அ. தமிழ்செல்வன்,நகர ப. க. துணை அமைப்பாளர் கபில்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிறைவில் மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு நன்றியுரையாற்றினார்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *