கோவை பி.எஸ்.ஜி.கன்வென்ஷன் சென்டர் அரங்கில் பிரபல மேஜிக் கலைஞர் விக்னேஷ் பிரபுவின் மேஜிக் மற்றும் மெண்டலிஸம்,பாடல்,டப்பாபீட் குழுவினரின் இசை நிகழ்ச்சி என ஒரே மேடையில் ஐந்து விதமான அரங்கம் அதிரட்டுமே எனும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்..
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மிக முக்கியமான நகரமான பார்க்கப்படும் கோவையில் பொழுது போக்குவதற்கான இடங்கள் என்பது குறைவாகவே உள்ளது..
இதனால் கோவைக்கு தொடர்ந்து திரை பிரபலங்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த படையெடுத்து வருகின்றனர் இந்நிலையில் இதில் மாறுபட்டு மேஜிக் மற்றும் மெண்டலிசம் எனும் பார்வையாளர்களை கவரும் அரங்கம் அதிரட்டுமே எனும் நிகழ்ச்சியை கோவையில் முதன்முறையாக (Eight D) 8 D மார்க்கெட்டிங் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்..
டிசம்பர் 13 ந்தேதி அவினாசி சாலை நீலாம்பூர் அருகே உள்ள பி.எஸ்.ஜி.கன்வென்ஷன் உள் அரங்கில் நடைபெற உள்ள நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது..
இதில் பேசிய, (Eight D) 8 D மார்க்கெட்டிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விஷ்ணு ராஜகோபால் மற்றும் அவரது குழுவினர் செய்தியாளர்களிடம் பேசினர்..
கோவை வாழ் மக்களை மகிழ்விக்க, மிகச் சிறந்த அனுபவத்தை தர, லிங்கா ஆர்கிடெக் வழங்கும் அரங்கம் அதிரட்டுமே நிகழ்ச்சி, வருகிற டிசம்பர் 13ஆம் தேதி மாலை 6 மணி முதல் நடைபெற உள்ளதாகவும்,சாரல் பேக்ஸ் மற்றும் கார்ஸ்327 ஆகியோர் ஒருங்கிணைப்பில் 8D மார்க்கெட்டிங் ஏஜென்சி ஏற்பாடுசெய்துள்ள இந்த நிகழ்ச்சியில், மாலை 6 மணி முதல் தொடர்ந்து நான்கு மணி நேரம் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்தனர்..
இதில் உலகின் மிக சிறந்த மாயாஜால கலைஞர் விக்னேஷ் பிரபு மேஜிக் & மெண்டலிசம் நிகழ்ச்சி, விஜய் டிவி சூப்பர் சிங்கர் இறுதி போட்டியாளர் விக்னேஷ் ராஜு, சரிகமப லிட்டில் சாம்ப் டைட்டில் வின்னர் மெல்லிசை இளவரசன் திவினேஷ் மற்றும் யோகஸ்ரீ ஆகியோரின் பாடல் நிகழ்ச்சி, இந்தியாவின் தலைசிறந்த சிறுவர்களின் டப்பா பீட் இசை நிகழ்ச்சியும் என ஒரே மேடையில் ஐந்து விதமான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்..
இதற்கான டிக்கெட் விற்பனைகள் துவங்கி உள்ளதாகவும், டிக்கெட் பிரிக்ஸ், புக் மை ஷோ மற்றும் டிக்கெட்டி ஆகிய தளங்களில் முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர் மேலும் நேரடியாகவும் டிக்கெட்டுகளை பெற கார்ஸ் 327 (CARS327) ஷோரூமை அணுகலாம் என கூறினர்..