திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலையில் கட்டி முடிக்கப்பட்ட பொருநை அருங்காட்சி
யகத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் வரும் 20ம் தேதி திறந்து வைக்க உள்ளார். திருமால் நகரிலிருந்து அருங்காட்சியகம் செல்லும் சாலை இருபுறங்களிலும் குப்பை மேடாக
மிகவும் மோசமான நிலையில் காட்சியளித்தது

அந்த சாலையை பசுமை வழி சாலையாக உருவாக்குவதற்காக திருநெல்வேலி மாநகராட்சி 54-வது வார்டு குடியிருப்போர் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாமன்ற உறுப்பினர் கே.கே.கருப்பசாமி கோட்டையப்பன் மரக்கன்றினை ஊன்றி துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி 54-வது வார்டு குடியிருப்போர் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக சங்கத்தின் தலைவர் முருகன், இணை செயலாளர் இராஜகோபால் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதி (டி. எஸ்.பி) மற்றும் கந்தசாமி ( திருமால் நகர்) ஜெபகுமார், இராதா கிருஷ்ணன் வழக்கறிஞர் கவி. சுந்தர்சிங், அசரியா மெல்வின்சாமுவேல் , பால் எட்வர்டு, விஜய கிருஷ்ணா நகர், சந்தோஷ் நகர் ஜான் சுந்தரம், பழனிசாமி, இராஜேந்திரன்
( ஐ.எஸ். ஆர். ஓ.) மாமன்ற உறுப்பினர் அலுவலக மேலாளர் பழனி வேல், மயன்நகர்.கவி.
சுப்பையா, பங்கஜ் நகர் முனைவர் ரமேஷ், விஜய மணி கண்டராஜ்
(பி.எஸ்.என்.எல்.) ஆகியோர் மரம் நடும் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் செயலாளர் இரா.சண்முகம் நன்றி கூறினார்.

அருங்காட்சியகம் சாலையில் உள்ள மரங்களை கடந்த பிசான பருவத்தில் நடவு செய்திட்டோம். கடந்த கோடை காலம் மற்றும் ஆடி மாத கோடை வரையிலும் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விட்டு வளர்த்த பெருமைகள் அனைத்தும் திருநெல்வேலி மாநகராட்சி 54-வது வார்டு குடியிருப்போர் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் உறவுகள் மற்றும் பங்களிப்பு செய்த சங்கத்தின் உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர் , வனத்துறை அதிகாரிகள் குறிப்பாக மாவட்ட வன அலுவலர் இளங்கோ உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள பொருநை அருங்காட்சியக பசுமை வழி சாலையில் தொடர்ந்து மரங்களை நடவு செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.


விரைவில் இதற்கான முன்னேற்ற பணிகள் துவங்க திருநெல்வேலி மாநகராட்சி 54-வது வார்டு குடியிருப்போர் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *