தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் எனது இளைய பாரதம் Mera Yuva Bharath சார்பில், சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை பேரணி நடைபெற்றது.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் இன்று (04.12.2025) எனது இளைய பாரதம் Mera Yuva Bharath சார்பில், சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இதுகுறித்த செய்தி தொகுப்பு

இந்தியாவின் முதல் துணை பிரதமர் /இரும்பு மனிதர் என்று போற்றப்படும், சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்த தினம், ஆண்டுதோறும் அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்திய அரசின், இளைஞர் விவகாரத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும் வரும் நவம்பர் 25ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூரில் உள்ள எனது இளைய பாரதம் சார்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டு ஒற்றுமை குறித்து உறுதி மொழி எடுத்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் 300 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து தாராபுரம் திரு ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் விடுதி வரை சென்று மீண்டும் அதே பாதையில் தொழிற்பயிற்சி மையத்திற்கு செல்லும் வழியில் பதாகைகள் ஏந்தி ஒற்றுமையை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.

இதில் கலந்து கொண்ட மாணவ -மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஃபிலிப்ஸ் ராஜா, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெங்கடகிருஷ்ணன், இளையோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜ்மோகன், தொழிற்பயிற்சி நிலைய ஆசிரிய ஆசிரியைகள் காவல்துறையினர் உள்ளிட்டோர் பலர் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *