எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் அணி சார்பாக மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருமுல்லைவாசல் தனியார் பள்ளில் மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மேலும் கொள்ளிடம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலகணேசன் வரவேற்புரை ஆற்றினால் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வன் முன்னிலை வகித்தார் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், பஞ்சுகுமார், பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.மருது ,நகர இளைஞரணி அமைப்பாளர் பிரவீன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது பேச்சுத் திறமையை காண்பித்தனர்

மேலும் அப்பகுதி மீனவர்கள் மாவட்டச் செயலாளரிடம் துறைமுக முக துவாரம் தூர் வார வேண்டும் என கோரிக்கையை வைத்தனர் அதன்படி நேரில் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளும் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *