கோவை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 69வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் திரு. சரவணன் தலைமை தாங்கினார்.
பாஜக மாவட்ட தலைவர் திரு கரு.மாரிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.சதீஷ்குமார், திரு ஜெகநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் திரு விக்னேஷ், மாவட்ட செயலாளர்கள் சுவாமிநாதன், உமாசங்கர், ஸ்ரீஜா, அணி பிரிவு மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணியம், செந்தில்குமார், செங்கோடன், மண்டல தலைவர்கள் கே.ஆர்.எஸ்.சரவணகுமார், சூரியநாதன், சுரேஷ்குமார், மங்களதீபா உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.