பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 ந்தேதி பாசிச எதிர்ப்பு தினமாக எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கிற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது..

இதன் ஒருபகுதியாக எஸ்டிபிஐ கட்சியின் கோவை மத்திய மாவட்டம் சார்பாக உக்கடம் பகுதியில் மாவட்ட துணைதலைவர் சிவக்குமார் தலைமையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாஸ் வரவேற்புரையாற்றினார் மாவட்ட பொருளாளர் மீடியா மன்சூர் தொகுத்து வழங்கினார்.. ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்தீக்,தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன்,எஸ்டிபிஐ கட்சி வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம்
ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி உரை நிகழ்த்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்தீக், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு தைரியமான முடிவை எடுத்துள்ளதாக கூறிய அவர்,இதனால் மதநல்லிணக்கத்தை பறை சாற்றுகின்ற வகையில் எடுத்த முடிவை வரவேற்பதாக கூறினார்..

ஆர்ப்பாட்டத்தில்,மாவட்டத் தலைவர் முகமது இசாக்,மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் இப்ராஹிம் பாதுஷா,மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் ரஹீம்,
மாவட்ட செயலாளர்கள் உமர் ஷரீஃப்,ஹனீப் கான்,அபுதாஹீர், காமிலா பானு,மாவட்ட செயற்க்குழு உறுப்பினர்கள் ஷானவாஸ்,அபுதாஹிர், முகமது இக்பால் உட்பட மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள்,மகளிர் அமைப்பினர் என இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க கோஷமிட்டு முழக்கமிட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *