பெரம்பலூர்.டிச.06. பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் கீழ் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் -1, ஆய்வக உதவியாளர் -1, ஆலோசகர் (யோகா & நேட்சுரோபதி)-2, சிகிச்சை உதவியாளர் (பெண்)-1, மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் -2, பல்நோக்கு சுகாதார பணியாளர் (சு.ஆ-II) - 1 ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்ப பதிவிறக்கம், கல்வி தகுதி, வயது வரம்பு, மேலும் மற்ற விவரங்கள் https://perambalur.nic.in/ இணையத்தளத்தில் உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 08.12.2025 முதல் 20.12.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
மேலும் இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது, எந்த காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது. பணியில் சேர சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும் பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மிருணாளினி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *