இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
திருவாரூர் கீழவீதியில் உள்ள பழமை வாய்ந்த துர்வாசகர் மகரிஷி ஆலயம் என்று அழைக்கப்படும் பாடல் பாடப்பெற்ற ஸ்தலமான அருள்மிகு பஞ்சின் மெல்லடியாள் சமேத தூவாயநாதர் கோயிலில் இன்று இரவு 7 மணிக்கு கார்த்திகை மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, அருள்மிகு சிவகாமி அம்மன் சமேத ஆனந்த பைரவ கோலாகல நடராஜ பெருமானுக்கு மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், திருநீர், சந்தனம் போன்ற அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து புதிய வஸ்திரங்கள் சாத்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாத திருவாதிரை நட்சத்திரத்தில் அபிஷேகம் நடைபெறுவது இவ்வாலயத்தின் தனிச் சிறப்பாகும்.