திமுக கவுன்சிலர்கள் போர் கொடி.
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15- வார்டுகள் உள்ளன. பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த மாரி என்பவர் இருந்து வருகிறார்.
இவர் பேரூராட்சி வரிப்பணத்தை தேவையில்லாத இடங்களில் தலைவர் முறைகேடாக செலவுசெய்து வருவதாகவும் துணை தலைவர், கவுன்சிலர்களிடமும் ஆலோசனை செய்யாமல் அவராகவே முடிவு எடுத்து வருகிறார்.
பேரூராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 1,3,4,7,8,9,10,12,14,15, என 10- வார்டுகளின் உறுப்பினர்கள் கையெழுத்து போட்டு கடந்த மாதம் 17-ம் தேதி பேரூராட்சி செயல்அலுவளரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் வழங்கினர்.
தொடர்ந்து தர்மபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம்பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கடந்த 24-ம் தேதி நேரில் மனு அளித்தனர்.
அதை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டியில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது சிறப்பு கூட்டம் நடைபெறும் எனவும், அதில் தலைவர், துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொள்ள வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டுயிருந்தது.
இதையடுத்து தலைவரை தவிர, துணை தலைவர் மற்றும் உறுப்பின்கள் நியமன குழு உறுப்பினர் ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டுயிருந் சிறப்புகூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆனால் கூட்டத்தில் செயல் அலுவளர் கலந்துகொள்ளாத நிலையில் பேரூராட்சி அலுவளர்களிடம் தலைவரை நீக்குவதற்கான கடிதங்களை மீண்டும் வழங்கி கவுன்சிலர்கள் சென்றனர்.