கோவையில் நடைபெற்ற மனித உரிமைகள் தின விழாவில் கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி பேச்சு

HROCS எனும் மனித உரிமை கழகம் நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்களில் உள்ள ஏழை எளிய மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும்,பொருளாதாரத்தில் பின்னடைந்த ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர்..

இந்நிலையில் உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு,கோவை நூர்சேட் மகால் அரங்கில்,HROCS எனும் மனித உரிமை கழகத்தில் தம்மை ஈடுபடுத்தி செயல்பட்டு வரும் அனைத்து நிர்வாகிகளுக்கும் விருதுகள் வழங்கும் விழா மற்றும் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது..

HROCS மனித உரிமை கழகத்தின் தலைவர் ஏ.எம்.முஸ்தபா பட்டாம்பி தலைமையில் நடைபெற்ற விழாவில்,கோவை மாவட்ட தலைவர் டிஸ்கோ காஜா முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார்..

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்..

அப்போது பேசிய அவர், உலகில் உள்ள அனைத்து மக்களின் உரிமையை பாதுகாப்பதை வலியுறுத்தி மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுவதாக தெரிவித்த அவர்,அனைத்து தரப்பினருக்கும் வேற்றுமைகள் இன்றி சம உரிமை வழங்குவதே மனித உரிமைகளின் முக்கிய நோக்கம் என கூறினார்…

உணவு உண்ணுவது துவங்கி,கடவுளை பிரார்த்திப்பது என மக்களிடம் பல வேற்றுமைகள் இருந்தாலும் எல்லாவற்றிலும் அவரவரின் உரிமைகளை மதித்து நடப்பதை அனைவரும் உறுதி செய்வதே மனித உரிமைகளின் நோக்கம் என தெரிவித்தார்…

தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஏழை எளிய குடும்பத்தினருக்கு அரிசி மளிகை பொருட்கள் புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன..

விழாவில் HR O CS மனித உரிமை கழகத்தின் பல்வேறு மாநில,மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *