முத்துப்பேட்டையில் தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருவாரூர் மாவட்ட 4 வது மாநாடு உதயமார்த்தாண்டபுரம் தனியார் மண்டபத்தில் மாவட்ட துனை செயலாளர் டி சந்திரா தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மாநில துணைசெயலாளர் பி.எம்.இளங்கோவன் மாநிலக்குழு உறுப்பினர் டி.கணேசன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

இந்த மாநாட்டில் 21 பேர் மாவட்டக்குழுவாக தேர்வு செய்யப்பட்டு தலைவராக கோமலப்பேட்டை முருகானந்தம், செயலாளராக கே.பாலசுப்ரமணியன், பொருளாளராக டி.துர்க்கையம்மாள் , துணைத்தலைவர்கள் குன்னூர் பாஸ்கர், கேப்டன் சேகர் துணைச்செயலாளர்கள் டி.சந்திரா, ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு மேலும் 21 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் தீர்மானம் முத்துப்பேட்டை கோட்டூர் போன்ற பகுதிகளிலிருந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம் சென்று வர நேரடி பஸ் வசதி. மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று, பஸ் பாஸ், ரயில் பாஸ் , அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட வேண்டும்.

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கும் 35 கிலோ அரிசி குடிமனை பட்டா வழங்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள் மாத உதவி நிலுவைத் தொகையை உடன் வழங்க வேண்டும். உதயமார்த்தாண்டபுரம் தெற்கு பள்ளியமேடு காமராஜர் தெரு மண் சாலையை சிமிண்ட் சாலையாக மாற்றித் தரவேண்டும்.

உதயமார்த்தாண்டபுரம் ரெவுனி வடிகால் வாய்க்காலை சரிசெய்யவேண்டும் என மாநாட்டில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *