சென்னை தண்டையார்பேட்டையில் 15 வயதுடைய பெற்ற மகளை சீரழித்த தந்தை, சகோதரனுக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவள்ளுர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் கடந்த 2020 முதல் 2023ம் ஆண்டு வரை 15 வயது சிறுமியை அவரின் தந்தை உதயகுமார் -46 சகோதரன் ஜெய் -23 இருவரும் மாறி மாறி பல முறை பாலியில் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமி 2023ம் ஆண்டு டிசம்பர் 28 ம் தேி கொடுத்த புகாரின்படி திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார்.

இன்று நடந்த விசாரணையில் நீதிபதி உமாமகேஸ்வரி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தை மற்றும் சகோதரன் இருவருக்கும் உறவினர் மற்றும் ரத்த சம்பந்த உறவுமுறை என்ற இரு பிரிவுகளின் கீழ் தலா 14 ஆண்டுகள் சிறையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

மேலும் இளம்பெண்ணுக்கு 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளி்த்தார்.இதையடுத்து இருவரையும் திருவொற்றியூர் போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் சீனிவாசன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *