துறையூர் டிச-12
திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில்”மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0″நடைபெற உள்ளதை தொடர்ந்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் ஆலோசனை பேரில் துறையூர் தேமுதிக கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தலைமையில் 11/12/2025 அன்று மாலை 6 மணியளவில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அவைத்தலைவர் முருகேசன் முன்னிலை வைத்தார். ஒன்றிய கழக பொருளாளர் கிருஷ்ணசாமி வரவேற்புரை ஆற்றினார் இக்கூட்டத்தில் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைக்கழக நிர்வாகிகளுக்கு மாநாட்டுக்கான அழைப்பிதழ் நேரில் சென்று வழங்குதல், 2) மாநாட்டுக்கு சுமார் 15 வாகனங்களில் செல்வது , 3) மாநாட்டை விளம்பரப்படுத்த சுவர் விளம்பரம் செய்தல்,பிளக்ஸ் பேனர் வைப்பது, போஸ்டர் ஒட்டுவது உள்ளிட்ட பணிகள் செய்வது,4) டிசம்பர் 28 அன்று கேப்டன் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு முசிறி பிரிவு ரோடு ரவுண்டானாவில் அன்னதானம் வழங்குவது, 5) 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற முழு ஒத்துழைப்போடு பாடுபடுவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஒன்றிய பிரதிநிதிகள் நடராஜன், பிரபாகரன், மணிகண்டன், மாமுண்டி ஒன்றிய துணை செயலாளர்கள் செந்தில், அமுதவள்ளி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்ட நிறைவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றியுரை ஆற்றினார்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *