பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் மாவட்ட தலைவராக பதவி ஏற்பு..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து.
இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்த நிலையில் கட்சியின் பல்வேறு செயல்பாடுகளை செய்து வந்துள்ளார்.
தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது, கட்சி தலைமை கூறும் அனைத்து நிகழ்வுகளையும் செய்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர் நாச்சிமுத்து.
தொடர்ந்து கட்சியின் சார்பாக சட்டமன்ற வேட்பாளராக பழனி தொகுதியில் வலம் வந்தவர். இந்நிலையில் தற்போது கட்சியின் மறு சீரமைப்பு பணி காரணமாக திண்டுக்கல் குடகனாறு இல்லத்தில் மாநில துணை தலைவர் இளமான் சேகர் தலைமையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக நாச்சிமுத்து என்பவரை நியமனம் செய்தார்.
தொடர்ந்து இந்நிகழ்வில் தொகுதி தலைவர் ராஜேந்திரன் முன்னாள் மாவட்ட தலைவர் மனோகரன் தொகுதி செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்கும் மாவட்ட தலைவர் நாச்சிமுத்துக்கு பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்..