திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு, வட்ட மாநாடு, பணி நிரந்தர ஒற்றைக் கோரிக்கை ஆகியவை முப்பெரும் விழாவாக மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக வட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் வரவேற்றார். வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பா.சிவநேசன் மற்றும் பரமசிவம் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணன் ஒஹச்டி சங்க மாநில தலைவர் விஜயபாலன், பொதுச் செயலாளர் சங்கர் ஒஹச்டி, மாநில பொருளாளர் ராமநாதன், டிஎன்ஜிஒபிஎஸ் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ் கலந்து கொண்டு ஒற்றை கோரிக்கை குறித்து விளக்கவுரை ஆற்றினார்.

முப்பெரும் விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் நல வாரிய அட்டை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், ஊராட்சியில் பணிபுரியும் மக்கள் நல பணியாளர்கள், தூய்மைக் காவலர் தூய்மை பணியாளர்கள், ஒஹச்டி ஆப்ரேட்டர்கள், சுகாதார ஊக்குனர்கள், கணினி உதவியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகிய பணியாளர்களின் ஒற்றைக் கோரிக்கையான பணி நிரந்தரம் செய்ய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. வட்ட ஒருங்கிணைப்பாளர் வீரையன், மாவட்ட நிர்வாகிகள் அறிவழகன், சுந்தரமூர்த்தி, சுதர்சன், அஜிதா, பாவானி, மேனகா, மகேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாரிமுத்து டிஎன்ஜிஒபிஎஸ் மாநில பொருளாளர் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *