திருவாரூர்த் தமிழ்ச் சங்கம்,மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம் ஆகிய இணைந்து நடத்திய தமிழ் தேசியக் கவிஞர் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா செல்விஸ் டைமன் ஹாலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருவாரூர்த் தமிழ்ச் சங்கம், தலைவர் புல்வர் இரெ.சண்முக வடிவேல் தலைமை தாங்கினார். திருவாரூர்த் தமிழ்ச் சங்கம், புரவலர் தியாகபாரி, ஏ கே எம் நிறுவனம் நிர்வாக இயக்குனர் மருத்துவர் செந்தில், திருவாரூர்த் தமிழ்ச் சங்கம்,துணைத் தலைவர் புலவர் சந்திரசேகரன்,அறநெறி லயன் சங்கம் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.தொடர்ந்து கவிஞர் முத்துக்குமார் விருந்தினரை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் அறிமுக மாவட்ட ஆளுநர் மற்றும் கவிஞருமான செளமா ராஜரத்தினம் கலந்துகொண்டு “பைந்தமிழ்த் தேனீ பாரதி” என்ற நூலை வெளியிட்டார்.பின்னர் அவர் பேசியதாவது:
பாரதி ஒரு மா கவிஞர். தனது கவிதைகள் மூலமாக தேச விடுதலை மட்டுமல்லாது சமூக விடுதலையும் விரும்பியவர். அவரின் கவிதைகள் ஆழமான அழுத்தமான பொருள் கொண்டவை. இந்தியா முழுமைக்கும் ஆன விடுதலை விரும்பிய அதே நேரத்தில் தமிழ் சமூகத்தில் நிலவிய சாதி மத இன வேற்றுமைகளை கலைவதற்கும் அவற்றில் இருந்தான சமூக விடுதலைக்கும் தமது கவிதைகள் கதைகள் கட்டுரைகள் வாயிலாக பெரும் போராட்டங்களை வலியுறுத்தியவர். பாரதியாரின் கதைகள் கவிதைகளை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் அதற்கு இதுபோன்ற நல்ல ஆய்வு நூல்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்
இதில் , எஸ்.வி.டி .ஜெ.கனகராஜ், ஏ.கே.எம்.பி.செந்தில், மருதம் கலை இலக்கிய ஆய்வு மையத்தின் அறங்காவலர் முனைவர்.கி.மணிவாசகம், அறநெறி லயன்ஸ் சங்கத்தின் லயன் டி.ராஜ்குமார், அச்சுதை முருகதாஸ், தெ. சுதர்சனன் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் சக்தி செல்வ கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
முன்னதாக திருவாரூர்த் தமிழ்ச் சங்கம், செயலாளர் ஆருர்.அறிவு வரவேற்றார். நிறைவில் கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் முனைவர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ் சங்கத்தில் துணைச் செயலாளர் முனைவர் அறிவழகன் ஒருங்கிணைத்தார். இதில் தமிழ்ச் சங்கம் மற்றும் லயன் சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்