சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் உதவி ஆணையர் வீரக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்

எண்ணூர் நெட்டுக் குப்பம் பகுதியில் 3 வது தெருவில் கார்த்திக் என்பவர் தனது வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு காளி சிலை அமைத்து சுவாமி வழிபாடு, மாந்திரீகம் செய்ததாகவும் கூறப்படுகிறது

இதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் சிலையை வைக்க கூடாது என அவற்றை அகற்றி எடுத்து கொண்டு சென்று விட்டார். இதைஊ கார்த்திக் நீதிமன்றத்திற்கு சென்று சிலை அமைப்பதற்கான உத்தரவை பெற்றார்.

நேற்று சிலையை வைப்பதற்காக முற்பட்ட நிலையில் ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நெட்டுக்குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் வீரக்குமார் திருவொற்றியூர் எம். எல். ஏ . கே. பி சங்கர். ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அருகில் உள்ள கோவிலில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *