பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்..
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டி வன்னியர்களுக்கு 10.5 / இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீட்டையும் வழங்க வலியுறுத்தி கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கையில் பதாய்களுடன் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக கட்சி நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.