திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்னை BCS நிறுவனம் சார்பில் ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு( R.O) இயந்திரம் வழங்கப்பட்டு, மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஒப்பளிக்ப்படும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு BCS நிறுவனத்தால் வழங்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் சென்னை BCS நிறுவனத்தின் CEO பிரகாஷ் பழனி மற்றும் ஒருங்கிணைப்பாளர் எஸ்.திருமுருகன் சார்பாக அருண் பரமசிவம், ஆகாஷ் பாஸ்கர், அஸ்வின் பாலகுருநாதன் மற்றும் ஆலங்குடி ஆலயக்குழ தொண்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.தமிழழகன், ஹேமலதா, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வக்கீல் ஏ.எம்.மோகன் சார்பில் துணைத் தலைவர் ரஞ்சித், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மாரியப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் பா. ராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், SMC உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *