செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு வேளாண்மை துறை மாணவர்கள் மேற்கொள்ளும் கிராம புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் இரும்புலி கிராமத்தில் 90 நாட்கள் தங்கி விவசாய
பணிகள் குறித்துபயின்று வந்தனர்.
இந்நிலையில் முதல்வர் முனைவர் டாக்டர். எம்.ஜவஹர்லால் அறிவுரையின் பேரில் பேராசிரியர்கள் டாக்டர்கள். ஆர்.ராஜசேகர், எம்.ஆர்.நவீன்குமார், ஏ.முகமது இக்ஷானுல்லா, ஆர்.சஸ்மிதா, டி.குங்குமச்செல்வன் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் பி.ரெக்ஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி பள்ளி மாணவர்களுக்கான
பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
எஸ்.ஆர்.எம் வேளாண் கல்லூரி ராபர்ட் சேம்பர்ஸ் குழு மாணவர்கள் டி.சரண், பி.ச.ஜினோலின், கு.ராகுல் ரிச்சர்ட், செ.கோகுல், பெ.ஆகாஷ்,மு.கமலேஷ் ஆனந்த், சி.கிஷோர் குமார், கு.சஞ்சய்குமார், இ.நேரேஷ் குமார் உள்ளிட்டோர் திருக்கழுகுன்றம் செங்கல்பட்டு ஜீவா நினைவு பொதுப் பள்ளியில் தற்போதைய மற்றும் எதிர்கால ஆரோக்கியமான சந்ததியினருக்கு மண்ணைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வைப் பெறவும் கற்றுக்கொள்ளவும் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதற்காக எஸ்.ஆர்.எம் வேளாண் மாணவர்கள் ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தினர்.
மேலும், மண் பாதுகாப்பு தொடர்பான சில வினாடி வினாக்களிலும் எஸ்.ஆர்.எம் மாணவர்கள் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தினர் மண்ணின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிய பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.