திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கம் திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை ஆவணப்படுத்தி நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள் பல்வேறு வகையான நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.

அவை இலக்கியம் (கவிதை, கதை), அறிவியல், வரலாறு, தத்துவம், கலை, தொழில்நுட்பம், சுயசரிதை, குழந்தைகள் நூல்கள், குறிப்பு நூல்கள் (அகராதி, கலைக்களஞ்சியம்), மின் நூல்கள் (e-books), ஒலி நாடாக்கள், ஒளி நாடாக்கள், குறுவட்டுகள் (CDs), வரைபடங்கள் போன்ற பல வடிவங்களில், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் கிடைக்கின்றன.

அவை அறிவுப் பெருக்கத்திற்காகவும், ஆராய்ச்சிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் பயன் படுகின்றன. எழுத்தாளர்களின் நூல் வகைகள் பொருள் அடிப்படையில் இலக்கிய நூல்களில் கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை, நாடகம், வரலாறு, வாழ்க்கை வரலாறு,அறிவியல் & தொழில் நுட்பம் நூல்களில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல், மருத்துவம்.சமூக அறிவியல் நூல்களில் பொருளாதாரம், அரசியல், சமூகவியல், உளவியல்.கலை & பொழுதுபோக்கு நூல்களில் இசை, ஓவியம், சினிமா, விளையாட்டு.குறிப்பு நூல்கள் நூல்களில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், என்சைக்ளோபீடியாக்கள், அடைவு நூல்கள் குழந்தைகள் நூல்களில் சிறுவர் கதைகள், படக் கதைகள், கல்வி சார்ந்த நூல்கள்.ஆன்மிகம் & தத்துவம் நூல்களில் மத,சமய நூல்கள், தத்துவ நூல்கள், யோகா இடம்பெறுகின்றன.

நூல்களின் வடிவங்களில் அச்சு நூல்களில் வழக்கமான காகித நூல்கள்,மின் நூல்கள் (E-books): கணினிகள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் போன்களில் படிக்கக்கூடியவை.
மின்வளங்கள் (E-Resources)மின் இதழ்கள் (E-Journals), தரவுத்தளங்கள் (Databases).
காட்சி-ஒலி வடிவங்கள் (Audio-Visual) குறுவட்டுகள் (CDs), டிவிடிகள் (DVDs), ஒலி நாடாக்கள், காணொளிகள்.நுண்ணிய வடிவங்கள் (Microformats) நுண்படலங்கள் (Microfiche), நுண்சுருள்தகடுகள் (Microfilm). வரைபடங்கள் (Maps) நில வரைபடங்கள், திட்ட வரைபடங்கள் என பல்வேறு வடிவங்களில் நூல்கள் வெளிவந்துள்ளன.

அறிவு பெருக்கத்திற்காக உழைத்த சமகால எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை ஆவணப்படுத்த கூடிய வகையில் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் நூலாக வெளி கொண்டுவர முயற்சியினை மேற்கொண்டு உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள் தங்களது வாழ்க்கை வரலாற்றினை 40 வரிக்கு மிகாமல் சரியான தகவலுடன் திருச்சி மாவட்ட எழுத்தாளர் வாழ்க்கை வரலாறு தொகுப்பு நூல் ஆசிரியரும், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலருமான பெ. விஜயகுமார் 9842412247 whatsapp எண்ணில் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கட்டுரையாக சரியான தகவலுடன் செய்தியாக பதிவிட வேண்டும். எழுத்தாளர்கள் பதிவிடும் தகவல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படும் நூல் வெளியீட்டு விழா அன்று பங்கேற்பாளர்கள் தேவையான பிரதிகளை நேரடியாக வாங்கிக் கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் த. இந்திரஜித் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க வாழ்க்கை வரலாறு நூலில் இடம்பெறும் எழுத்தாளர்கள் 40 வரிக்கு மிகாமல் கட்டுரையினை 2025 டிசம்பர் 19ஆம் தேதிக்குள் 9842412247 whatsapp எண்ணில் பதிவிட வேண்டும்‌. எழுத்தாளர்கள் அனுப்பும் தகவலுக்கு எழுத்தாளர்களே பொறுப்பாவார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *