கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் 2 ஆம் கட்ட விரிவாக்கம் மாவட்ட கலெக்டர் பற்று அட்டைகளை வழங்கினார் தமிழக முதல்வர் மு.
க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் தமிழகத்தின் சாதனைப் பெண்கள் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்
சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் என் இராமகிருஷ்ணன் பெரியகுளம் கே எஸ் சரவணக்குமார் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் 1750 மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நகர் மன்ற தலைவர்கள் தேனி ரேணு ப்ரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் சின்னமனூர் அய்யம்மாள் ராமு கம்பம் வனிதா நெப்போலியன் கூடலூர் பத்மாவதி லோகந்துரை பேரூராட்சி மன்றத் தலைவர்கள் பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் வீரபாண்டி கீதா சசி பழனிசெட்டிபட்டி அ.மிதுன் சக்கரவர்த்தி தென்கரை வி. நாகராஜ் தாமரைக்குளம் ச. பால்பாண்டி வடுகபட்டி சி.நடேசன் மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி தேவாரம் லட்சுமி பால் பாண்டி கோம்பை முல்லை மோகன் ராஜா அனுமந்தன் பட்டி ராஜேந்திரன் கம்பம் புதுப்பட்டி சுந்தரி பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்