தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் நடைபெற்று வரும் வேளையில் தெப்பக்குளத்தின் வடபுறம். தென்புறம் ஆகிய இரு பகுதியிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதை சுமார் 6 அடி அளவுக்கு பள்ளம் விழுந்து விரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து மாவட்ட பிஜேபி தலைவர் சித்ராங்கன் தலைமையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதன் அடிப்படையில் தெற்கு மாவட்ட பிஜேபி வழக்கறிஞர் அணி சார்பில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பின்பு செய்தியாளர்களிடம் மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறுகையில் தெப்பக்குளம் சம்பந்தமாக துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளோம்.
தெப்பக்குளத்தை சுத்தம் படுத்துகிறோம் என்ற பெயரில் 75 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விட்டதாக கூறுகிறார்கள். யாருக்கு டெண்டர் விட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. புதியதாக போடப்பட்ட நடைமேடை முழுவதும் உடைப்பு ஏற்பட்டு. சேதம் அடைந்துள்ளது. விரிசல் ஏற்பட்டு உள்ளது.
தெப்பக்குளம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அங்கே அமர்ந்து இருப்பார்கள். பள்ளி குழந்தைகள் அதில் அமர்ந்து சாப்பிடுவார்கள் அவர்களெல்லாம் இருக்கும்போது இந்த நிகழ்வு நடந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும் .இதில் தொடர்புடைய நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெப்பக்குளத்தை யாருக்கு காண்டாக்ட் விடப்பட்டுள்ளது. எப்போது டெண்டர் விடப்பட்டது
என்ற விபரத்தை வெள்ளை அறிக்கை மாநகராட்சி வெளியிட வேண்டும். இதனை திரும்ப சீரமைப்பு செய்வதற்கு மாநகராட்சி மக்கள் பணத்தில் செலவு செய்யக்கூடாது ஒப்பந்தக்காரர் தான் செலவு செய்ய வேண்டும்.
ஏற்கனவே ஒப்பந்தம் செய்த ஒப்பந்தக்காரர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறினார்.
தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன். மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் சின்னத்தம்பி பாண்டியன். மாவட்டத் துணைத் தலைவர்கள் முத்துராமலிங்கம். சிவராமன். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் முருகன். மோகன்தாஸ். வழக்கறிஞர் சுரேஷ். மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பிரிவு கிஷோர். வக்கீல் முத்துக்குமார் மாவட்ட மாநில சமூக ஊடகப் பிரிவு செயலாளர் காளி ராஜ். மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி தன்னார்வ தொண்டு பிரிவு மாவட்ட தலைவர் முத்துக்குமார் ராஜா. ஓ பி சி அணி மாவட்ட செயலாளர் சேர்ம குருமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்