கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் கட்டுமான பொருட்களின் கழிவுகள், பழைய கட்டட கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் சமீபகாலமாக தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதாக நகராட்சிக்கு புகார் வந்தவண்ணம் உள்ளது
எனவே பொதுவெளியில் கொட்டும் கட்டிட மற்றும் கட்டுமான கழிவு பொருட்களை ரொட்டிக்கடை பாறைமேடு பகுதியில் உள்ள குழிகளில் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என்று வால்பாறை நகராட்சி ஆணையாளர் குமரன் அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்