குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பஸ் நிலையம் அருகே தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி செல்லும் வழியில் உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்றக்கோரியும், வடலூர் நகராட்சி ஊழலை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்திற்கு,கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்,மாவட்ட துணை செயலாளர் ஜெயவேல்,வடலூர் நகரசெயலாளர்கள், அலாவுதீன், ஜில்லா மணி,ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜசேகரன், குறிஞ்சிப்பாடி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செல்ஆறுமுகம் நகர நிர்வாகிகள் இளமாறன், சூரியா, தர்மராஜ்,நவீன்குமார், புனிதா, கவிதா , உட்பட பல கலந்து கொண்டனர்,

செய்தியாளர்களிடம், போராட்ட குழுவினர் கூறியதாவது,விரைவில் மதுபான கடைகளை அகற்றவில்லை என்றால், ஐந்தாயிரம், மக்களை திரட்டி மதுபானக்கடையை அகற்றுவோம், எனஅவர்கள் கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *