கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாக கூறி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன

இந்நிலையில் அடிப்படை வசதிகளான குடிநீர் வினியோகம், குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தல்ஆகிய அடிப்படை பணிகள், மேலும் நகராட்சியில் நடைபெற்று வரும் கட்டுமானங்கள், எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வரும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில்உள்ள கடைகளை வாடகைக்கு விடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் லஞ்சம் கை மாறி உள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் சீர்கேடு அடைந்துள்ளதாக கூறி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். நகரத் தலைவர் கே. ஆர். எஸ். சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில பொருளாலர் எஸ் ஆர் சேகர், முன்னாள் நகராட்சி தலைவரும் பாஜக மாநில நிர்வாக குழு உறுப்பினருமாகிய சதீஷ்குமார், மாவட்ட பொது செயலாளர் கார மடை விக்னேஷ் , நகராட்சி கவுன்சிலர்கள் சலீம், தனசேகர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *