திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கருணீகர் சங்கம் கிளை சார்பில் சிறப்பு ஆலோசனை கூட்டம் அச்சரப்பாக்கம் சாலை ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க கௌரவ தலைவர் டாக்டர் எஸ் குமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் சங்க வளர்ச்சி பற்றியும். சங்கம் சார்பில் மும்முனி பகுதியில் வாங்கிய வீட்டு மனை பகுதியில் சங்க கட்டிடம் கட்டுவது குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் சங்க தலைவர் வி.விஜயகுமார், சங்க செயலாளர் இராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.