விபத்தில்லா மதுரை மாநகரை உருவாக்கும் விதமாக, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வழிகாட்டுதலின்படி, மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) மேற்பார்வையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வாகனங்களில் அதிக வெளிச்சம் தரும் ஒளிவிளக்கு களை பயன்படுத்தும் போது ஏற்படும் விபத்துக்கள் குறித்து எடுத்துரைக்கும் விதமாக, திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் மாநகர போக்குவரத்து காவல்துறையினர் மதுரை சிம்மக்கல் போக்குவரத்து சிக்னல் அருகில், வாகனங்களின் முகப்பு விளக்கு களில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.