வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.

தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் வரலாற்றுச் சாதனை படைத்த திண்டுக்கல் ராஜன் உள்விளையாட்டு அரங்க மாணவி லின்சியா.

துபாயில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஆசிய பாரா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக இந்தியா சார்பில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்தைச் சேர்ந்த திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பிரிவு ராஜன் உள் விளையாட்டு அரங்க பயிற்சியாளர் பிரேம்நாத்தின் மாணவி வீராங்கனை லின்சியா வரலாறு படைத்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் டேக்வாண்டோ பயிற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை, ஆசிய விளையாட்டு ஒலிம்பிக் அல்லது பாராலிம்பிக்கில் மாநிலம் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை.இது வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும். நமது தேசிய கூட்டமைப்பு – இந்திய டேக்வாண்டோவின் வலுவான ஆதரவுடன் டேக்வாண்டோ சங்கம் தமிழ்நாடு உருவெடுத்த பிறகு சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *