தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் நிறுவன செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் கல்லூரி இணைச் செயலாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா கல்லூரி துணை முதல்வர் டாக்டர் வி வாணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் BIG DATA என்ற தலைப்பில் தகவல் தொழில்நுட்பத் துறை உதவி பேராசிரியர் சி.வி. வாசுகி உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி துறைத் தலைவர் டாக்டர் ஜெ. தஸ்லின் பாத்திமா ஆகியோர் பேசும் போது பெருந்தரவு என்ற தலைப்பில் மென்பொருள் பயன்பாடு தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இயந்திரக் கற்றல் கணினித் தரவுகள் செயற்கை நுண்ணறிவு தேர்வின் அளவு தரவு புள்ளிகள் குறித்து மாணவிகளுக்கு புரியுமாறு விரிவாக விளக்கி பேசினார்கள்

இந்த நிகழ்வில் கல்லூரி துறை சார்ந்த பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் எஸ். பத்மபிரியா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார் தகவல் தொழில்நுட்பத் துறை கல்லூரியின் உதவிப் பேராசிரியர் என். கிருஷ்ணவேணி நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *