நாளை மறுநாள் 18ம் தேதி ஈரோட்டில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு மக்களை சந்தித்து உரையாற்றுகிறார்.
இந்நிலையில் பெரியார் பிறந்த ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்துவதை முன்னிட்டும், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவர் பெரியார் என்பதாலும் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா எனும் கலைஞர் பெரியார் மண்ணில் விஜய் என்கிற தலைப்பில் மண்ணை கொண்டு ஓவியம் வரைந்துள்ளார்.அதில் விஜய் மற்றும் பெரியார் இருவரது முகத்தையும் வரைந்துள்ளார். சுமார் ஆறு மணி நேரமெடுத்து இதனை வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.