ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டல் தொடர்பான ஒருநாள் விழிப்புணர்வு முகாம் 19.12.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தகவல்

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் பயன்பெறும் வகையில் தொழில்நெறி வழிகாட்டல் குறித்த விழிப்புணர்வு முகாம் 19.12.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்புவரை படித்துள்ள 18 முதல் 40 வயதுடைய தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம் இந்த முகாமில் கலந்துகொள்ள வருகை புரிபவர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 19.12.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கிற்கு வருகைதர வேண்டும்.

இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 97153 26379 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *