அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை முடக்க நினைக்கும் பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் காமராஜ் காந்தி சிலை அருகே நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆ சங்கர் தலைமை தாங்கினார்
நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மா மு சிவகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார் மாவட்ட பொருளாளர் மனோகரன் பொதுக்குழு உறுப்பினர் ஆண்டிமடம் ராஜசேகர் வட்டாரத் தலைவர்கள் அரியலூர் வடக்கு கர்ணன் தெற்கு பாலகிருஷ்ணன் திருமானூர் மேற்கு திருநாவுக்கரசு கிழக்கு கங்காதுரை டி பழூர் அலகாநந்தம் ஜெயங்கொண்டம் சக்திவேல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலை பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மகளிர் அணி நிர்வாகிகள் ரேணுகாதேவி சகுந்தலா தேவி உமா மாவட்ட துணைத்தலைவர்கள் ஏபிஎஸ் பழனிச்சாமி ராகவன் அரியலூர் அரசு சிமெண்ட ஆலை கலைச்செல்வன் வைப்பூர் சண்முகம் நகர பொறுப்பாளர்கள் வரதராஜன் அன்பழகன் அருள் அப்பாதுரை செந்தில் வேல் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட தகவல் பிரிவு தலைவர் ராஜி அனைவருக்கும் நன்றி கூறினார் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை அகற்ற நினைக்கும் பிஜேபி அரசை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது