மத்திய அரசு ஓய்வூதியர்களை புறக்கணிக்கும் வகையில் கொண்டுவந்துள்ள சட்டத்தை ரத்து செய்யவேண்டும்: தென்இந்திய இரயில்வே ஓய்வூதிய சங்கத்தின் துணைப்பொதுச்செயலாளர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை…
மத்திய அரசு ஓய்வூதியர்களை புறக்கணிக்கும் நோக்கில் கொண்டுவந்துள்ள சட்டத்தை ரத்து செய்யவேண்டுமெனவும், இல்லாவிடில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தென் இந்திய இரயில்வே ஓய்வூதிய சங்கத்தின் துணைப்பொதுச்செயலாளர் சாந்தகுமார் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் இந்திய இரயில்வே பென்சனர் சங்கத்தின் சிறப்பு கூட்டம் திருவாரூரில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தென் இந்திய இரயில்வே ஓய்வூதிய சங்கத்தின் துணைப்பொதுச்செயலாளர்கள் சாந்தகுமார், நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு தீர்மானங்களை விளக்கி ஓய்வூதியர்கள் மத்தியில் பேசுகையில்,
மத்திய அரசு ஓய்வூதியர்களை புறக்கணிக்கும் வகையில் கொண்டுவந்துள்ள சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய முன்வரவேண்டும், 8வது சம்பள கமிஷனில் ஓய்வூதியர்களுக்கான விதிமுறைகள் 3வது பாகத்தில் ஒய்வூதியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பரிந்துரையினை நீக்கிட வேண்டும். இது சம்மந்தமாக ஒய்வூதிய சங்கங்கள் ஒருங்கிணைந்து அகில இந்திய அளவில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். இதுதவிர ஒய்வூதியர்களது நலனில் அக்கறையின்றி ஓய்வூதியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை எதிர்த்து அகில இந்திய அளவில் அனைத்து ஓய்வூதிய சங்கங்களுக்கும் ஒருங்கிணைந்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து சட்டபூர்வமாகவும் இப்பிரச்சனைக்கு தீர்வுகாண போராடி வருகிறோம் என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் இரயில்வே துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும்,
இரயில்வே ஊழியர் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்து இரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடன் நிரப்பவேண்டும் முதலான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.